வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக் அப் செய்ய எளிய வழி....

கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் அப் தகவல்களை எவ்வளவு வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனின் மெமரியும் மிச்சமாகும், கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்னையும் ஏற்படாது.
 | 

வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக் அப் செய்ய எளிய வழி....

கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் அப் தகவல்களை எவ்வளவு வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனின் மெமரியும் மிச்சமாகும், கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்னையும் ஏற்படாது.

பொதுவாக கூகுள் ட்ரைவில், 15 ஜிபி அளவு வரையில்தான் தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் கூகுள் ட்ரைவில் இடம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், வாட்ஸ் அப் தகவல்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போன் தொலைந்தாலோ, புதிய போன் வாங்கினாலோ, அந்த போனிலும் பேக் அப் மூலம் பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம். ஆனால், வாட்ஸ் அப்புக்காக கூகுள் ட்ரைவை பயன்படுத்துவதில் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் கூகுள் ட்ரைவில் நீங்கள் பேக் அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால் நவம்பர் 12-க்குள் மீண்டும் பேக் அப் செய்யவேண்டும். இல்லையென்றால், பழைய தகவல்கள் தானாக நீக்கப்பட்டுவிடும். நவம்பர் 12-க்கு  பின்னர், ஓராண்டுக்கு மேலாக கூகுள் ட்ரைவில் பேக்அப் எடுக்காமல் இருந்தாலும் பழைய தகவல்கள் முற்றிலும் அழிந்துவிடும். அடிக்கடி பேக் அப் எடுத்து சேமித்து கொள்வது அவசியம். பேக் அப்பை கூகுள் ட்ரைவில் எடுப்பதன் முலம், போன் மெமரியில் சேமிக்கப்படுவது தவர்க்கப்படுமே தவிர, போனில் சேமிக்க ப்பட்ட வாட்ஸ் அப் படங்கள், வீடியோக்கள் நீக்கப்படாது. அவற்றை நாம்தான் நீக்க வேண்டும்.

புது போனில் வாட்ஸ் அப் செயலியை நிறுவும் போது பழைய போனில் இருந்த பேக் அப் செய்யப்பட்ட தகவல்களை இழக்காமல் பெறலாம். கூகுள் ட்ரைவுடன் வாட்ஸ் அப்பை எப்படி இணைப்பது? வாட்ஸ் அப் செயலியை திறந்து, வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும். Settings > Chats > Chat Backup தேர்வு செய்யவும். கீழுள்ள Google Drive Settings-ல் Gmail ID உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையென்றால், உள் நுழையவும். அது போல், எப்போது பேக் அப் எடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடவும். வைபை இணைப்பில் இருக்கும் போது பேக் அப் எடுத்தால், செல்பேசி டேட்டா வீணாவதை குறைக்கலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP