மூன்று கேமராக்களுடன் அசத்தும் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி ஏ20எஸ்

சாம்சங் மொபைல் நிறுவனம், தனது சாம்சங் கேலக்ஸி மாடலில், சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் என்ற மாடலை புதிதாக களமிறக்கியுள்ளது.
 | 

மூன்று கேமராக்களுடன் அசத்தும் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி ஏ20எஸ்

சாம்சங் மொபைல் நிறுவனம், தனது சாம்சங் கேலக்ஸி மாடலில், சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் என்ற மாடலை புதிதாக களமிறக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி மாடல் மொபைல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது சாம்சங் நிறுவனம் தனது புது படைப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ20 ஐ விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. மற்ற சாம்சங் கேலக்ஸி வகைகளை போன்றே தோற்றமளித்தாலும், இதன் அமைப்புகள் சற்று மாறுபட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். 

இதன் சிறப்பம்சங்கள் : 

6.5 இன்ச் ஹெச்.டி. + வி - டிஸ்ப்ளே

ஆக்டாகோர் க்வாள்கம் ஸ்நாம்டிராகன் 450 ப்ராஸசர்

3ஜிபி/4ஜிபி ராம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ்

8மிமி மெலிதான தோற்றமும், பின்புறத்தில் கண்ணாடி போன்ற அமைப்பு

பின்புறம் பொறுத்தப்பட்டிருக்கும் மூன்று கேமிராக்கள்

13எம்.பி. ப்ரைமரி லென்ஸ் + 8எம்.பி. அல்ட்ரா வைட் லென்ஸ்

8 எம்.பி கொண்ட முன் கேமரா

பேட்டரி - 4,000எம்.ஏ.ஹெச்

ஒலி தொழில்நுட்பம் - டால்பை அடாமஸ்
நீள்வட்ட அமைப்பு கொண்ட கைரேகை ஸ்கேனர்

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் 3ஜிபி ராம்+32ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை - ரூ.11,999

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் 4ஜிபி ராம்+64ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை - ரூ.13,999

இந்த வகை மொபைல்கள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களிலும், சாம்சங் இ - ஸ்டோர், சாம்சங் ஓபெரா ஹவுஸ் மற்றும் இ - காமர்ஸ் போர்ட்டல்களிலும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் மொபைல் மாடலுக்கு முன்னர், சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஆகிய மாடல்கள் ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தினால் களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP