வேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்!

ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் அண்டை நாட்டை உளவு பார்க்கும் ரோபோவைக்களை போன்று அமெரிக்கா உளவுத்துறைக்கு பயன்படுத்தப்படும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை களமிறக்க அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) திட்டமிட்டுள்ளது.
 | 

வேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்!

வேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்!

ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் அண்டை நாட்டை உளவு பார்க்கும் ரோபோக்களை போன்று அமெரிக்கா உளவுத்துறைக்கு பயன்படுத்தப்படும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை களமிறக்க அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) திட்டமிட்டுள்ளது. 

சமைப்பது, வீட்டுவேலை செய்வது, டோர் டெலிவரி செய்வது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மூளையில்லா ரோபோக்கள் மறைந்து செயற்கை நுண்ணறிவு கொண்ட, தாமாக சிந்தித்து மனிதர்களை போன்று அனைத்து வேலைகளை செய்யும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோக்கள் அமெரிக்க உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பில் (CIA) பணியமர்த்தப்படவுள்ளன. செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்படும் ரோபோக்கள், மனிதர்களை விட துரிதமாகவும், திறம்படவும் செயல்படும் இதற்காகவே இந்த மாற்று ஏற்பாடு என்கிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு துணை இயக்குநரான டான் மேயர்ரீக்ஸ்.

வேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்!

அமெரிக்காவில் நடக்கும் அனைத்து செயல்களையும் சாலைகளில் உள்ள சிசிடிவி மூலம் கண்காணித்து, தவறு நடக்கும் இடங்களை அறிந்து, தவறு செய்யும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குவதே இந்த ரோபோவின் வேலை. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக, மறைந்துவாழும் பிறநாட்டு உளவாளிகளை தன் செயற்கை நுண்ணறிவால் ஸ்கேன் செய்து அவர்களை உளவுத்துறை அதிகாரிகளிடம் பிடித்து கொடுக்கும் வேலையையும் ரோபோக்கள் பார்க்கிறது.

இது அமெரிக்காவை சுற்றியுள்ள 30 நாடுகள் ட்ரோன் கேமராக்களின் மூலம் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்று 140 திட்டங்களுக்காக இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.  சோதனை முயற்சியில் உள்ள ஸ்பை ரோபோக்களுக்கு முழு பயிற்சி அளித்து விரைவில் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP