வாட்ஸ்ஆப் க்ரூப்பில் பிரைவட் மெசேஜ்: புதிய அப்டேட்

வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஒருவர் மட்டும் பார்க்கும் படி மெசேஜ் அனுப்பும் வசதி தற்போது வாட்ஸ்ஆப் பீட்டா வேர்ஷனில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப்பில் மற்றவர்கள் பார்க்காத படி பிரைவட் மெசேஜ் அனுப்பலாம்.
 | 

வாட்ஸ்ஆப் க்ரூப்பில் பிரைவட் மெசேஜ்: புதிய அப்டேட்

வாட்ஸ்ஆப் க்ரூப்பில் ஒருவர் மட்டும் பார்க்கும் படி மெசேஜ் அனுப்பும் வசதி தற்போது வாட்ஸ்ஆப் பீட்டா வேர்ஷனில் இடம்பெற்றுள்ளது. 

மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்களை கொண்டு வருகிறது. பயன்பாட்டாளர்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் அந்த அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. 

அந்தவகையில் தற்போது குரூப்பில் இருக்கும் நபருக்கு யாரும் பார்க்காத விதத்தில் பிரைவட் மெசேஜ் அனுப்பும் வசதி வாட்ஸ்ஆப் 2.18.335 வேர்ஷன் போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் குரூப்பில் மெசேஜ் அனுப்பும் போது அவருக்கு நீங்கள் தனியாக மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அந்த மெசேஜ்ஜை அழுத்த வேண்டும். அப்போது அருகே ஒரு ஆப்ஷ்ன்ஸ் டேப் திறக்கும். அதில் ஓபன் பிரைவட்லி என்ற ஆப்ஷன் மூலம் இந்த வசதியை பயன்படுத்த முடியும். 

Google Play beta programmeல் உறுப்பினராக இருந்தால் தான் இந்த வசதியை தற்போதைக்கு பயன்படுத்த முடியும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP