பிடிக்காத குரூப்பிலிருந்து நிரந்தரமாக வெளியேறலாம்: வாட்ஸ்ஆப் அப்டேட்

பிடிக்காத குரூப்பில் இருந்து நிரந்தரமாக விலகுவது, மென்ஷன் ஆப்ஷன் உட்பட பல புதிய வசதிகளை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது.
 | 

பிடிக்காத குரூப்பிலிருந்து நிரந்தரமாக வெளியேறலாம்: வாட்ஸ்ஆப் அப்டேட்

பிடிக்காத குரூப்பிலிருந்து நிரந்தரமாக வெளியேறலாம்: வாட்ஸ்ஆப் அப்டேட்பிடிக்காத குரூப்பில் இருந்து நிரந்தரமாக விலகுவது, மென்ஷன் ஆப்ஷன் உட்பட பல புதிய வசதிகளை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது. 

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.  புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்ஆப் குரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், குரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் வசதி மற்றும் குரூப்களில் உள்ளவர்களை குரூப்களை உருவாக்கும் போது குரூப் குறித்த விவரங்களை டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை குரூப்பில் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் இந்த டிஸ்க்ரிப்ஷனை பார்க்க முடியும். 

குரூப் டிஸ்க்ரிப்ஷன்களை அட்மின்கள் மற்றும் குரூப்பில் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் குரூப் அட்மின்கள் அவர்கள் இந்த வசதியை பயன்படுத்தாத வண்ணம் முடக்க முடியும். இதே போன்று குரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை குரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும். 

இத்துடன் குரூப் அட்மின்கள் மற்ற அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் குரூப் உருவாக்குபவரை இனி குரூப்பை விட்டு வெளியேற்ற முடியாது.  மேலும் அட்மின் நினைத்தால் மற்ற நபர்கள் வாட்ஸ்ஆப்பில்  ரிப்ளை அனுப்பமுடியாத படிக்கூட செய்ய முடியுமாம். 

வாட்ஸ்ஆப்பில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. குரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க குரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.

வாட்ஸ்ஆப் குரூப்களில் உள்ளவர்களை நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குரூப்களில் இருப்பவர்களை தேட குரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும். 

மேலும் குரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பிடிக்காத குரூப்பில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கான வசதியும் வந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP