லீவ் விட்டாச்சு! ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க!

விண்வெளியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை திறக்க அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 | 

கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் ஸ்பேஸ் 2.0 மாநாட்டில் விண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டல் திறக்கவுள்ளதாக ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் "அரோரா நிலையம்" எனும் லக்ஸரி ஹோட்டலை விண்வெளியில் நிறுவவுள்ளது. 2022 முதல் விருந்தளிக்க உள்ளது அரோரா பேலஸ் ஹோட்டல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட முன்னதாக முன்பதிவு செய்யவேண்டுமாம், முன்பதிவு செய்ய முன் தொகையாக ரூ. 51 லட்சம் கேட்கிறது ஓரியன் ஸ்பான் நிறுவனம். இந்த ஹோட்டலில் ஒரு குடும்பமாக ஆறு பேர் 12 நாட்களுக்குத் தங்க இந்திய மதிப்பில் சுமார் 61 கோடி ரூபாய் செலவாகுமாம். 

லீவ் விட்டாச்சு! ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க!

அரோரா நிலையம் ஒரு பெரிய தனியார் ஜெட் ராக்கெட் அறைக்குள் இருப்பது போன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடி. மொத்தம் 6 பேர் மட்டுமே தங்க முடியும். ஸ்பேஸ் ஸ்டேஷன் என்பதால் அரோரா நிலையம் மிதக்குமா என்ற கேள்வி எழுவதுண்டு ஆனால் இங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உட்புகுத்தப்பட்டதால் பூமியில் இருப்பது போன்றே இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அரோரா நிலையத்தில் தங்க பணம் செலுத்தும் நான்கு விருந்தினர்களுக்கும், இரு ஆராய்ச்சி குழுவினர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. சம்மருக்கு கூலிங்கான இடமான ஊட்டி, கொடைக்கானலுக்கு போலாம் ரூ. 51 லட்சம் கட்டி எங்கே விண்வெளிக்கு செல்லமுடியும் என்பது பலரின் மைண்ட்வாய்ஸ்!

லீவ் விட்டாச்சு! ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க!
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP