டூயல் டிஸ்பிளே கொண்ட சாம்சங் போன் அறிமுகம்

சீனாவின் ஷாங்காய் நகரில் தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய மாடலான சாம்சங் W2019 ஃப்ளிப் போனை அறிமுகம் செய்துள்ளது. W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 ஃப்ளிப் போன் வெளியிடப்பட்டுள்ளது
 | 

டூயல் டிஸ்பிளே கொண்ட சாம்சங் போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடலான சாம்சங் W2019 ஃப்ளிப் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய மாடலான சாம்சங் W2019 ஃப்ளிப் போனை அறிமுகம் செய்துள்ளது. W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 ஃப்ளிப் போன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4.2 இன்ச் AMOLED டிஸ்பிளே பேனல்கள், ஸ்னாப்டிராகன் 845 பிராசசர் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்பக்கம் டூயல் கேமரா உடன் AI சென்சார் இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளமும் பின்னர் ஆண்டராய்டு 9 பை இயங்குதளத்திற்கு அப்டேட் ஆகும் என தெரிகிறது. இந்த வருடத்தில் வெளிவந்த கேலக்ஸி எஸ்9 மொபைலில் கொண்டிருந்த ஸ்னாப்டிராகன் வேரியண்ட் போல, W2019 மொபைலிலும் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் பாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் சீனாவில் தனது ஃப்ளிப் போனை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. முதல் ஃப்ளிப் மொபைலானது கடந்த நவம்பர் 2016ல் ஸ்னாப்டிராகன் 820 கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு W2018 மாடலை வெளியட்டது. இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP