ட்விட்டரில் ஃபேஸ்புக் போன்ற வசதி அறிமுகம்!

ட்விட்டரில் விரும்பிய ட்வீட்களை சேமித்துக் கொள்ளும் வகையில், புக்மார்க் வசதி உள்ளிட்ட அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

ட்விட்டரில் ஃபேஸ்புக் போன்ற வசதி அறிமுகம்!

ட்விட்டரில் ஃபேஸ்புக் போன்ற வசதி அறிமுகம்!ட்விட்டரில் விரும்பிய ட்வீட்களை சேமித்துக் கொள்ளும் வகையில், புக்மார்க் வசதி உள்ளிட்ட அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஃபேஸ்புக்கில் பதிவுகளை சேமிக்கும் வசதி கொண்டு வந்தது போல, ட்விட்டரும் தமது பயனாளர்களுக்காக சில புது வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பயனாளர்கள் தாங்கள் விரும்பும் ட்வீட்களை ஷேர் செய்யவும், அதை புக்மார்க் செய்து கொள்ளும் வசிதியையும் அந்த தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஷேர் ஐகானை கிளக் செய்து அதை மற்றவர்களுக்கு எளிமைாக பகிரவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும்.

இவ்வாறு புக்மார்க் செய்யப்பட்ட ட்வீட்டுக்களை, முகப்பு பக்கத்தில் உள்ள புக்மார்க் ஆப்ஷனை க்ளிக் செய்து பார்க்க முடியும். மேலும், ஷேர் செய்யும் வசதியும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP