இன்ஸ்டாகிராம் தான் மோசமான சமூக ஊடகமாம்!

ஃபேஸ்புக் போல தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் இந்த செயலியின் வளர்ச்சி தொடர, மற்றொரு பக்கம் இது தான் இருப்பதிலேயே மோசமான சமூக வலைதளம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

இன்ஸ்டாகிராம் தான் மோசமான சமூக ஊடகமாம்!

ஃபேஸ்புக் போல தற்போது இன்ஸ்டாகிராம்  செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயன்படுத்த மிகவும் எளிதாக இருப்பதாலும், வெறும் புகைப்படங்கள், வீடியோக்களை வைத்தே இந்த செயலி செயல்படுவதாலும் இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

ஒருபக்கம் இந்த செயலியின் வளர்ச்சி தொடர, மற்றொரு பக்கம் இது தான் இருப்பதிலேயே மோசமான சமூக வலைதளம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த்  அண்ட் யங் ஹெல்த் மூவ்மெண்ட் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 

லண்டனில் 14-24 வயதில் இருக்கும் 1500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களிடம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் தங்களின் தூக்கம், பயம், சோர்வு, மன அழுத்தம் என குறிப்பிட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படுத்துபவை பற்றி ரேட்டிங் கேட்கப்பட்டது. 

இதில் இன்ஸ்டாகிராம் தான் மிகவும் மோசமான சமூக ஊடகம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி உள்ளது. தங்களை கவர்பவர்கள் போல இருக்க முயற்சி செய்வதால் இன்ஸ்டா பயன்பாட்டாளர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP