இன்ஃபோசிஸ் : 10,000 பணியாளர்கள் நீக்கம்!!!

பன்னாட்டு நிறுவனமான காக்னிசன்ட்-ஐ தொடர்ந்து, இன்ஃபோசிஸும், நடுத்தர மற்றும் மூத்த பணியாளர்களில், சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது பெங்களூர் கிளையில் மொத்தமுள்ள 30,093  பணியாளர்களை 10 சதவீதமாக குறைக்க முடிவு செய்திருந்ததை தொடர்ந்து, தனது பணி நீக்கும் ப்ராஸ்ஸை தற்போது தொடங்கியுள்ளது.

இவர்களை தொடர்ந்து, பெங்களூர் கிளையில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் துணை தலைவர்கள் சுமார் 971 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய பணி நீக்கம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஒன்று தான் என்று கூறியுள்ளது பணி நீக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம்.

மேலும், இதை பல நிறுவனங்களும் ஆண்டு தோறும் மேற்கொண்டு வருவதாக கூறிய இன்போசிஸ் நிறுவனத்தார், இதை வேலையிழப்பு என்ற ரீதியில் பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

இன்ஃபோசிஸ்-ஐ தொடர்ந்து, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜிமினியும், வாடிக்கையாளர்களின் முதலீடுகள் குறைந்து விட்டதாலும் வேறு சில காரணங்களினாலும், தனது பணியாளர்களில் 500 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP