கொத்து கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

கொத்து கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கொத்து கொத்தாக மனிதர்கள் சாவார்கள்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது மூத்த ஆராய்ச்சியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன்படி 2018ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் தொற்றுநோய் பரவக்கூடும் என தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பட்டியலை புளூபிரிண்ட் ஆய்வு வெளியிட்டு வருகிறது. அதில் ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசிஸ் எக்ஸ் ஒரு தொற்று நோய் ஆகும். 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் ஜான்-ஆர்னே ரோட்டிஸ்டன் இதுகுறித்து கூறுகையில், ’டிசிஸ் எக்ஸ் X- வைரஸினால் ஏற்படும் விசித்திரமான நோயாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு கொண்ட மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் பன்றி காய்ச்சல் போன்ற நோயாகவும் இருக்கக்கூடும்’ என எச்சரிக்கிறார்.

எய்ட்ஸ், சார்ஸ், ஸ்வைன்ஃப்ளு, எபோலா என்று விஞ்ஞான உலகம் மனிதனுக்கு அறிமுகப்படுத்திய வியாதிகள் போதாது என்று புதிதாக டிசீஸ் எக்ஸ் வேறு பயமுறுத்துகிறது. இவற்றை எல்லாம் யார்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரியாதா? இதுபோன்ற உயிரி ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சிக்கு முடிவுகட்ட முடியாதா என்ற கேள்விதான் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP