சந்திரயான் 2 எப்படி செயல்படும்? - அமைச்சர் விளக்கம்

நிலவுக்கு இந்தியா இரண்டாவது முறையாக அனுப்பும் சந்திரயான் 2 திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய விண்வெளித் துறை இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
 | 

சந்திரயான் 2 எப்படி செயல்படும்? - அமைச்சர் விளக்கம்

சந்திரயான் 2 எப்படி செயல்படும்? - அமைச்சர் விளக்கம்நிலவுக்கு இந்தியா இரண்டாவது முறையாக அனுப்பும் சந்திரயான் 2 திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய விண்வெளித் துறை இணைய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

நிலவுக்கான பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார்.

அதில், சந்திரனுக்குப் பயணம் செய்யும் “சந்திரயான் – 2” முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் பயணம் ஆகும். அந்த ராக்கெட்டில் சுற்றுப் பாதையில் பயணம் செய்யும் பிரிவு (Orbiter), தரையிறங்கும் பிரிவு (Lander), நிலாவின் தரையில் நடமாடும் பிரிவு (Rover) ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன.

விண்கலன் நிலவுக்கு அருகில் சென்றதும், நிலவில் இருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும். அதன்பிறகுதான் “சந்திரயான்-2” விண்கலத்தின் உண்மையான செயல்பாடு தொடங்கும். நிலவில் இறங்கும் பிரிவு (Lander) பத்திரமாக, நிதானமாகத் தரையிறங்கும். அதையடுத்து, அதிலிருந்து நடமாடும் பிரிவு (Rover) தனியாகப் பிரிந்து நிலவின் தரையில் பயணித்து ஆய்வு மேற்கொள்ளும். அப்போது, சுற்றுப்பாதைப் பிரிவு (Orbiter) தொடர்ந்து நிலவைச் சுற்றிப் பறந்துகொண்டிருக்கும். அங்கிருந்து தொலையுணர்வு மூலம் நிலவின் நிலப் பகுதிகளைளை ஆய்வு செய்து தெரிவிக்கும்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) சூரியக் குடும்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. அந்த ஆய்வுக் குழு எதிர்காலத்தில் மேற்கொள்ளும் செவ்வாய்க் கிரகப் பயணம் குறித்து பரிந்துரைகளை அளித்துள்ளது. இது தொடர்பான தரவுகளுக்கான அறிவியல் முன்மொழிவுகளை வல்லுநர் குழு தேர்ந்தெடுத்துள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP