அதிக வேக சார்ஜர், செம ஸ்டைலான லுக்: ஒன்பிளஸ் 6டி மெக்லரென் போனில் சிறப்பம்சங்கள் தெரியுமா?

ஸ்மார்ட் போன் விற்பனையில் கலக்கி வரும் சீன நிறுவனமான OnePlusன் 6T McLaren எடிஷன் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இந்த செல்போன் நேற்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது.
 | 

அதிக வேக சார்ஜர், செம ஸ்டைலான லுக்: ஒன்பிளஸ் 6டி மெக்லரென் போனில் சிறப்பம்சங்கள் தெரியுமா?

ஸ்மார்ட் போன் விற்பனையில் கலக்கி வரும் சீன நிறுவனமான OnePlusன் 6T  McLaren எடிஷன் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இந்த செல்போன் நேற்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. செம ஸ்பீடில் சார்ஜ் ஏறுவது, 10 ஜிபி ரேம் என இன்னும் இந்த செல்போனில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

OnePlus 6T McLaren Editionல் ரியர் பேனல் கிளாசுக்கு கீழ் கார்பன் ஃபைபர் பேட்டர்ன் உள்ளது. மேலும் கீழ் பகுதி மெக்லரென் பப்பாயா ஆரஞ்ச நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே நிறத்தில் தான் சார்ஜர் கேபிலும் இருக்கும். இந்த சார்ஜரை Warp Charge 30 என்று கூறுகிறார்கள்.  30W வேகத்தில் சார்ஜ் ஏறும் என்பதால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஒன்பிளஸ் 6டி போன்களில் இது 20Wஆகவே உள்ளது.

மெக்லரென் கார் பந்தயத்தின் லோகோ இந்த போனின் பின் பகுதியில் பதியப்பட்டுள்ளது. 10ஜிபி ரேம்முடன் வந்துள்ள இந்த போனில் மற்ற ஒன்பிளஸ் போன்களில் உள்ள அனைத்து அம்சங்களும் உள்ளன. இரண்டு நானோ சிம்கார்டுகள் போடும் வசதிக்கொண்ட இந்த போன்  ஆக்ஸிஜன்ஓஎஸ்- ஐ சார்ந்த ஆண்ராய்டு 9.0 பை கொண்டது.

அதிக வேக சார்ஜர், செம ஸ்டைலான லுக்: ஒன்பிளஸ் 6டி மெக்லரென் போனில் சிறப்பம்சங்கள் தெரியுமா?

6.41 இன்ச்கள் மற்றும் முழுவதும் எஹ்டி திரைக்கொண்டது. இதனுடன் கொரில்லா கிளஸ் 6ன் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. பின் கேமராவின் முதன்மை கேமரா 16 மெகா பிக்சலும், இரண்டாவது கேமரா 20 மெகா பிக்சலும் கொண்டது. மேலும் முன் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டது.

265ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் மெமரிகார்ட் பயன்படுத்த முடியாது. .ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் சென்சார் வசதியும் இதில் உள்ளது.

இந்த போன் வரும் 15ம் தேதி முதல் குறைந்த அளவில் இந்தியாவில் விற்பனை ஆக உள்ளது. இதன் விலை ரூபாய் 50,999 ஆகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP