ஃபேஸ்புக் மெசஞ்சரில் இனி குரூப் அரட்டைதான்!

பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 | 

ஃபேஸ்புக் மெசஞ்சரில் இனி குரூப் அரட்டைதான்!

ஃபேஸ்புக் மெசஞ்சரில் இனி குரூப் அரட்டைதான்!

ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

எத்தனையோ சாட்டிங் செயலி இருந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சருக்கான மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் குரூப் காலிங் வசதி, பேஸ்புக் மெசஞ்சரில் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஃபேஸ்புக் மெசஞ்சரில் இனி குரூப் அரட்டைதான்!

இதன்படி மெசஞ்சரில் வீடியோ சட் மற்றும் ஆடியோ சட் செய்யும் நேரத்தில் புதிய நண்பர்களையோ அல்லது குடும்பத்தவர்களையோ இணைத்துக்கொள்ள முடியும். இதற்காக Add Person என்ற ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐகானை கிளிக் செய்து புதிய நபர்களை இணைத்துக்கொண்டு குரூப் காலிங் செய்து அரட்டை அடிக்கலாம்.

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் அதிக பட்சமாக 50 நபர்களை ஒரு சட்டிங்கில் இணைத்துக்கொள்ள முடியும். தற்போது இந்த வசதி ஐஓஎஸ் மற்றும் அன்ராய்டு மொபைல்களில் அப்டேட் ஆகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP