செல்போனில் நமக்காக பேசும் கூகுள்: புதிய வசதி அறிமுகம்

நமக்காக செல்போனில் பேசி ஓட்டல், மருத்துவமனைகளில் அப்பாயின்மென்ட் வாங்கித் தரும் டுப்ளக்ஸ் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

செல்போனில் நமக்காக பேசும் கூகுள்: புதிய வசதி அறிமுகம்

நமக்காக செல்போனில் பேசி ஓட்டல், மருத்துவமனைகளில் அப்பாயின்மென்ட் வாங்கித் தரும் டூப்ளக்ஸ் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் நேற்று நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் பல்லாயிரம் பேர் முன்னிலையில் அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புதிய தொழில்நுட்ப புரட்சியை அறிமுகப்படுத்தினார். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியான கூகுள் டூப்ளக்ஸ் (Google Duplex) என்னும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு மென்பொருளான இது உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்மென்ட் பெற்றுக் கொடுக்கும். 

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த வசதி குறித்து அந்த மாநாட்டில் விளக்கம் அளித்தார். அதில், "இனி நீங்கள் அப்பாயின்மென்ட் வாங்குவதற்காக போனில் பேசி நேரத்தை செலவழிக்க வேண்டாம். உதாரணமாக செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் சலூனில் அப்பாய்ன்ட்மெட் புக் செய்யச் சொல்லலாம். கூகுள் உங்களுக்காக போன் அந்த சலூனுக்கு போன் செய்து பேசும்.

இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப இந்த மென்பொருள் பதில் அளிக்கும். பதில் கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்" என்றார். இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP