இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

ஜிஎஸ்எல்வி எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வரும் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
 | 

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

ஜிஎஸ்எல்வி எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மார்ச் 29ம் தேதி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

இஸ்ரோவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் 6 ஏ இந்த ராக்கெட் மூலம் புவிக்கு இணையான வட்டப்பாதையில் பயணிக்கும் வகையில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை 2140 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோளில் உயர் சக்தி கொண்ட எஸ்-பேண்டு (S-Band) அலைவரிசை கருவிகள் உள்ளன.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

தகவல்தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24 சி-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 விரிவாக்கப்பட்ட எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அடுத்த பத்து ஆண்டுகள் விண்ணில் வலம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

6000 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரிகள் அத்துடன் கியூ பேண்ட்களின் சேவையை வலுப்படுத்துவதற்காக நவீன சக்தி கொண்ட தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் இணைக்கப்பட்டு அதிநவீன சக்தி கொண்டதாக செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

ஜிசாட் 6 ஏ வின் பணிகள்: தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் முறையில் தகவல் சேகரித்தல், தேடல் மற்றும் மீட்பு சேவைகள் போன்றவற்றை மேம்படுத்தும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

இதற்கு முன், 2015ம் ஆண்டு இஸ்ரோ ஜிசாட்-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளை அனுப்பியது. அதன் எடை 2132 கிலோ ஆகும். தற்போது அனுப்பப்படும் ஜிசாட்-6ஏ-வின் எடை முந்தைய செயற்கைக்கோளைக் காட்டிலும் சற்றே அதிகம் ஆகும்.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

இருப்பினும், பிரெஞ்சு கயானாவில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் செலுத்தப்பட்ட ஜிசாட் 17 செயற்கைக்கோளைக் காட்டிலும் இது ஒரு டன் எடை குறைவுதான். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் அளவுக்கு இஸ்ரோ முன்னேற்றம் அடையவில்லை. 16 டன் வரையிலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 5 நாட்களில் ஜிசாட் 6 ஏ கவுண்டவுன் ஸ்டார்ட்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP