கிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்!

நிலவின் மேற்பரப்பு முழுவதிலும் நீர் இருப்பதாக நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

கிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்!

கிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்!

நிலவின் மேற்பரப்பு முழுவதிலும் நீர் இருப்பதாக இந்தியா அனுப்பிய சந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்த நாசாவின் கருவி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவு பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 1 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பியது. அதில் பல்வேறு ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருந்தன. நாசா கொடுத்த ஆய்வுக் கருவியும் சந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்தது. அது, நிலவில் எல்லா இடத்திலும் தண்ணீர் உள்ளது என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 1-ல் இடம் பெற்றிருந்த லூனார் ரீகானைசன்ஸ் (LRO) ஆய்வுக் கருவி மற்றும் மூன் மினராலஜி மேப்பர் (moon mineralogy mapper) என்ற கருவி நிலவில் கனிம வளங்கள் மட்டுமல்லாது நீரும் செறிந்து காணப்படுவதாக கண்டறிந்துள்ளது.  

நிலவின் துருவப் பகுதிகளில் மட்டுமே நீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறிவந்த நிலையில், நிலவின் எல்லா பகுதிகளிலும் நீர் இருப்பதை இந்த கருவிகள் உறுதி செய்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளம்புங்க... நிலால தண்ணீர் இருக்காம்!

எதிர்காலத்தில் நிலவிற்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள நீரை குடிநீராக்கலாம். நீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜனை பிரித்தெடுப்பதன் மூலம் ராக்கெடுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து சுவாசிக்க பயன்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவில் குறிப்பிட்ட நாளில்தான் தண்ணீர் இருக்கும் என்று இல்லை, நிலவின் எல்லா நாட்களிலும் (நிலவுக்கு ஓராண்டு என்பது 29.5 நாட்கள்) தண்ணீர் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP