கடலில் நீந்தும் மீன் வடிவிலான ரோபோ!

கடல் ஆராய்ச்சிக்காக நீருக்கடியில் ஆய்வு செய்யும் ரோபோ ஒன்று FIJI நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
 | 

கடலில் நீந்தும் மீன் வடிவிலான ரோபோ!

கடலில் நீந்தும் மீன் வடிவிலான ரோபோ!

கடல் ஆராய்ச்சிக்காக நீருக்கடியில் ஆய்வு செய்யும் ரோபோ ஒன்று ஃபிஜி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபைன்டிங் நிமோ போல, இந்த மீனுக்கும் இப்போது நிறைய ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.

சோஃபி என்று அழைக்கப்படும் இந்த ரோபோ தென் பசிபிக் பவழத் திட்டுக்களை ஆய்வு செய்ய கடலின் ஆழ் பகுதியின் நெடுந்தொலைவுக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு இருக்கும் துடுப்பு போல் செயற்கையான தசைகள் சோஃபி ரோபோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. மென்மையான செயற்கைத் தசையைக் கொண்ட மீன் (soft artificial muscle) என்ற பெயரின் அடிப்படையில் சோஃபி (SoFi) என்ற பெயர் அதற்கு வைக்கப்பட்டுள்ளது.


சுமார் 1. 6 கிலோ எடையும் 47 சென்டி மீட்டர் நீளமும் கொண்டது இந்த சோஃபி. இதன் மூக்குப் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சென்சார் மூலம் இயங்கும் இந்த ரோபோ முதல் முறையாக ஃபிஜியின் Taveuni கடல் பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP