மூடியிருக்கும் கண்ணை திறக்கும் ஃபேஸ்புக்கின் கண்டுபிடிப்பு

புகைப்படத்தில் மூடி இருக்கும் கண்ணை திறந்திருப்பது போல மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் ஆராய்ச்சி குழு உருவாக்கி உள்ளது.
 | 

மூடியிருக்கும் கண்ணை திறக்கும் ஃபேஸ்புக்கின் கண்டுபிடிப்பு

புகைப்படத்தில் மூடி இருக்கும் கண்ணை திறந்திருப்பது போல மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் ஆராய்ச்சி குழு உருவாக்கி உள்ளது. 

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உலகில் அனைத்தும் சாத்தியமாகி விட்டது. விண்வெளி ஆராய்ச்சி முதல் வெங்காயம் வெட்டுவது முதல் அனைத்தை பற்றியும் புது புது கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு கண்டுப்பிடித்துள்ளனர் ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள். 

கண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் போட்டோவில், அந்த நபரின் கண்களை திறந்திருப்பது போல் மாற்றும் திறன் படைத்த செயற்கை நுண்ணறிவு செயல்முறையை தான் அவர்களின் கண்டுபிடிப்பு.

இதில் Intelligent In-painting என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. இதனை அடோப் நிறுவனம் தனது போட்டோஷாப் அப்ளிகேஷனில் புகுத்தியது. Content Aware Fill என்ற அம்சம் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, போட்டோவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் போட்டோவிலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும். 

ஒரு இயற்கை காட்சியின் புகைப்படத்தில் மேகங்களை இல்லாத இடத்தில் போட்டோஷாப்பின் Content Aware Fill வசதியை பயன்படுத்தி மேகங்களை இணைக்க முடியும். மிகவும் தத்ரூபமாக இந்த முடிவு இருக்கும். இந்த முயற்சியை கொஞ்சம் டெவலப் செய்திருக்கிறது ஃபேஸ்புக்.இப்போதைக்கு இந்த வசதி வடிவமைக்கப்பட்டு இருக்கிறதே தவிற இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP