போலிச் செய்திகளை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை: ட்விட்டர், கூகுள், பேஸ்புக் தகவல்

அமெரிக்காவின் பெரு நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் மூலம் இந்தியாவில் பரவும் போலிச் செய்திகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

போலிச் செய்திகளை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை: ட்விட்டர், கூகுள், பேஸ்புக் தகவல்

சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபு்படும் என்று கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இந்தியாவில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்த பிறகு போலிச் செய்திகள் பரவுவதும் அதிகரித்துள்ளன. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்களும் ஏற்பட்டுள்ளன. 

இதனை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இதுகுறித்து அவர்கள் பேசினர்.

பேஸ்புக்கின் இந்திய நியூஸ் பார்ட்னர்ஷிப்பின் தலைவர் மனிஷ் கந்தூரி பேசும் போது, "மூன்றாவது தரப்பு மூலம் செய்திகளை சரிபார்ப்பதில் கடுமையான நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். மேலும் செய்திகளை சரிபார்க்க மூன்றாம் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். சட்ட ஆலோசகர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று அறிவித்தார். 

கூகுளின் ஆசிய-பசிபிக் நியூஸ் லேப்பை கவனித்து வரும் இரென் ஜே லியூ கூறுகையில், "பொய்யான செய்திகளை கண்டறிவதற்காக பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் ஆங்கிலம் உட்பட 6 இந்திய மொழிகளில் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிவதற்கான பணியாளர்கள் தயாராக இருப்பார்கள்" என்று உறுதிபடத் தெரிவித்தார். 

மேலும் ட்விட்டரின் உயர் அதிகாரி விஜயா கட்டே கூறுகையில், "பொய்யான செய்திகள் குறித்து எளிதாக ரிப்போர்ட் செய்யும் முறையை அமல்படுத்த  உள்ளோம்"  சுட்டிக்காட்டினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP