ஆதாரமற்ற புகார்களை நம்ப வேண்டாம் - இன்ஃபோசிஸ் கருத்து!!!

உலக அளவில் பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸ், தங்களது முதன்மை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
 | 

ஆதாரமற்ற புகார்களை நம்ப வேண்டாம் - இன்ஃபோசிஸ் கருத்து!!!

உலக அளவில் பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸ், தங்களது முதன்மை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளான சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் ஆகிய இருவரும் மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருந்ததாக மர்ம நபர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்ததை தொடர்ந்து, விசாரணை குழு ஒன்றை அமைத்து அவர்கள் இருவரையும் விசாரித்து வந்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். 

இதை தொடர்ந்து, இந்த விசாரணையின் முடிவில், மர்ம நபர்களின் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர் அந்நிறுவனத்தார். "பெயர் வெளியிடாமல் மர்ம நபர்கள் அளிக்கும் புகார்களுக்கு ஆதரங்கள் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. அவர்களின் புகார்களுக்கு நம்பகத்தன்மையும் இல்லை. எனினும், பதிவு செய்யப்பட்டுள்ள புகாரை நிராகரிப்பது சரியில்லை என்பதால், தனி குழு ஒன்றை அமைத்து நாங்கள் விசாரணை மேற்கொண்டிருந்தோம். இந்நிலையில், அவர்கள் மீது அளிக்கப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தார்.

இதை தொடர்ந்து, இவர்களின் இந்த செய்தி வெளியான சிறிது நேரங்களிலேயே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதங்கள் கட கடவென்று உயர்ந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP