லவ்வர் கூட வேண்டாம்... செல்போன் போதும்; அடம்பிடிக்கும் இளைஞர்கள்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், ஆறாம் விரலாக மொபைல் போன் மாறிவிட்டது. தூங்கும்போது கூடத் தலைக்கு அருகே செல்போனை வைத்துக்கொண்டு தூங்குவதுதான் இன்றைய நாகரிகமாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதலில் முழிப்பது செல்போன் முகத்தில்தான். இன்றைய இளசுகளுக்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.
 | 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு நிறுவனமான மோட்டரோலா நிறுவனம், 'மைண்ட்-ப்ரைன் பிஹேவியர் அன்ட் ஹாப்சன்' என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், 76 சதவிகித இந்தியர்கள் தங்களது மொபைல் போன்களோடு உணர்வுப்பூர்வமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அந்த அளவுக்கு மொபைல் போன் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இந்தியர்களில் 53 சதவிகிதம் இளைஞர்கள் செல்போன் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, குறைவாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது. 

46 சதவிகித இளைஞர்கள் போனை வாங்கித் தனியாக வைத்துவிட்டால் மீண்டும் அதனை எப்போது பயன்படுத்துவோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தங்களுக்குக் குடும்பம், காதல், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை யாருமே வேண்டாம் செல்போன் மட்டும் போதும் எனப் பெரும்பான்மையான இளைஞர்கள் மொபைல் போன் மீது பைத்தியமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இன்றைய இளம் தலைமுறையின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மொபைல் போன்கள் மாறிவிட்டது என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் இருந்து இளைஞர்கள் மீள வழியே இல்லை போலும்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP