எந்த நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்ய முடியும் தெரியுமா?

சில நேரங்களில் இணையத்தின் வேகம் நம் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ஆமை நடை போடும். ஆனால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் இணையத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 | 

எந்த நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்ய முடியும் தெரியுமா?

இணையம் அனைவருக்குமானது என்றான பிறகு அதன் பயன்பாடு நாம் கணக்கிட முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்வது தற்போதெல்லாம் மிக எளிமையான ஒன்றாக இருக்கிறது. 

ஆனால் எல்லா நேரத்திலும் டவுண்லோட் செய்வது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்காது. சில நேரங்களில் இணையத்தின் வேகம் நம் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ஆமை நடை போடும். ஆனால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் இணையத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஓபன் சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்தியாவில் 4ஜி வேகம்  சில நேரங்களில் 4.5 மடங்கு வேகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 25 இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு இதனை ஓபன் சிக்னல் கண்டறிந்துள்ளது. 

பிசியான நேரம் என்று சொல்லப்படும் பகல் வேலைகளில் இணைய வேகம குறைந்து விடுகிறது. அப்போது பலர் இணையத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே இந்தூரில் தான் 4ஜி டவுண்லோட் வேகம் அதிகமாக இருப்பதாக ஓபன்சிக்னல் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் அதிகாலை 4 மணிக்கு இணையத்தின் வேகம் அதிகமாகவும், இரவு 10 மணிக்கு மிக மோசமாக இருக்கிறது என்று அந்த சோதனையில் தெரியவந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP