பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்கை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாத ஆராய்ச்சியாளர்கள் ஒருவழியாக பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டறிந்துள்ளனர்.
 | 

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்கை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாத ஆராய்ச்சியாளர்கள் ஒருவழியாக பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டறிந்துள்ளனர். 

அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவிதம் பிளாஸ்டிக் பொருட்களே. 1940 களில் பிளாஸ்டிக்கிற்கு காப்புரிமை கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை மில்லியன் கணக்கான டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள் உடல்நலத்திற்கும், சுற்றிசூழலுக்கும் கேடு விளைவிக்கும் என தெரிந்தே பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம்.

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மக்கும் தன்மை இல்லாததால் பூமிக்கு அடியில் புதைந்து மண்வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஆண்டு ஒன்றிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சென்று கலந்து கடல்நீருக்கும், கடலில்வாழும் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், பிளாஸ்டிக்கை அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தனர். இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்ட்டீரியங்களை கண்டுபிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ஆராய்ச்சி.

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

ஜப்பானின் கொயட்டா மற்றும் கெயோ பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யும் ஆலையில் தொடர்ந்து நடத்திய ஆய்வில் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடிய பாக்டீரியங்களை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக்கின் மூலப்பொருளான பாலி எத்திலீன் டெராபைத்லேட்டை, இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற பாக்டீரியா அழிக்கும் திறன் கொண்டது என கண்டறியபட்டுள்ளது.

அதாவது இந்த பாக்டீரியங்கள், நிலத்திலோ நீரிலோ உள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கின்றன. இதனால் பிளாஸ்டிக் அழிக்கப்படுவதுடன் சுற்றுசூழல் மாசுபாடு தடுக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவால் மனிதனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன. என்ன இருந்தாலும், பாக்டீரியா தொற்றை தடுக்க முடியும் என்பதால், பிளாஸ்டிக் அழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP