பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

ஒலியைக்காட்டிலும் வேகமாகச் செல்லக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
 | 

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 3000 கிலோ எடை கொண்டது. 200 கிலோ வெடிபொருட்களுடன் 290 கிமீ-க்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடியது. இன்று காலை 10.40 மணியளவில் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. ஏற்கனவே பல்வேறு முறைகளில் சோதனை செய்யப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணை, இன்று ஏவுகணையின் ஆயுளை நீட்டிக்கும் சோதனை நடந்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாதுகாப்புத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அறிவியலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிக சக்தியும், நவீனமும் படைத்த சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு எதிரி நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP