வழக்கறிஞர்களை மிஞ்சிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

மனிதர்களுக்கு உதவுவதற்காக மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களையே மிஞ்சும் வகையில் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

வழக்கறிஞர்களை மிஞ்சிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

வழக்கறிஞர்களை மிஞ்சிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

மனிதர்களுக்கு உதவுவதற்காக மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களையே மிஞ்சும் வகையில் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், டியூக் சட்டப் பல்கலைக்கழகம், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 பேராசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்துக்கும் இடையே ஆய்வு செய்யப்பட்டது. 

அதாவது, வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான கோப்புகளைச் சரிபார்த்து பிரிக்கும் முறை குறித்து பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கும் இந்த நிபுணர் குழுவுக்கும் இடையே சோதனை செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருக்கு மொத்தம் 30 சட்ட விவகாரங்கள் குறித்த கோப்புகள் சரிபார்ப்பதற்காக அளிக்கப்பட்டன. அதே வேலை செயற்கை நுண்ணறிவு அமைப்புக்கும் கொடுக்கப்பட்டது.

சட்ட விவகாரங்கள் குறித்த கோப்புகளை ஆராய 4 மணி நேரம் கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், சட்ட வல்லுநர்களின் குழு 92 நிமிடங்களில் 85% துல்லியத்துடன் இப்பணியை முடித்தனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு அமைப்போ, வெறும் 26 நிமிடங்களில் 94% துல்லியத்துடன் கொடுக்கப்பட்ட வேலையை சட்டென செய்து முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் சட்ட வல்லுநர்களை விட செயற்கை நுண்ணறிவு அமைப்பு துரிதமாகவும், பிழையில்லாமலும் சரிப்பார்த்ததாக ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்கறிஞர் கிராண்ட் குலூவ்சன் கூறுகையில், ’செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட விரைவாக செயல்படுகிறது என்பதால், இனிமேல் வழக்கறிஞர்களின் வேலையை தொழில்நுட்பத்தை வைத்தே செய்துவிடலாம் என கூறமுடியாது. சட்டம் தொடர்பான வேலைகளில் பல சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது. சில வேலைகளை மட்டும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை பயன்படுத்தலாம்’ என்றார்.

இது போன்ற ஆய்வுகள் மற்ற துறைகளில் நடத்தப்படுவதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு விரைவாக செயல்படுகிறது என்பதை கண்டறிய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP