உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

நூறு விதமான ஆப்கள் வருவதால் சில நல்ல ஆப்கள் கூட நம் கண்களின் பார்வைக்கு படாமல் நழுவி விடுகிறது. இதோ 5 உருப்படியான ஆப்கள்.
 | 

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

ஒரு பக்க உலகம் அடுத்தவருக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. மற்றொரு உலகம் "ஆப்"-களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தினம் ஓர் ஆப், தினம் ஒரு நவீனம் என்று கூகுள் ப்ளே ஸ்டோர் நிரம்பி வழிகிறது. பல விதமான 'ஆப்'கள் வந்தாலும், அவற்றில் ஒரு சிலது மட்டுமே நாம் பயன்படுத்தக் கூடியதாகவும், நம் தேவைக்கு ஏற்றதாகவும் விளங்குகிறது. நூறு விதமான ஆப்கள் வருவதால் சில நல்ல ஆப்கள் கூட நம் கண்களின் பார்வைக்கு படாமல் நழுவி விடுகிறது. இதோ 5 உருப்படியான ஆப்கள் பற்றிய குறிப்புகள்:

டைம்லி கிளீனர் (Timely cleaner)

வாட்ஸப் இமேஜ் மற்றும் வீடியோ கிளீன் செய்வது வீட்டை கிளீன் செய்வதை விட பெரிய வேலையாக இருக்கிறதா? அப்படியெனில், இந்த ஆப் உங்களுக்குத்தான். ஒரே வீடியோ மற்றும் இமேஜ் பல்வேறு குரூப்களில் நம்மை சுற்றிச் சுற்றி அடிப்பதால் ஃபோன் மெமரி சீக்கிரம் குறைந்து விடுகிறது. அப்படி பல முறை சேமிக்கப்படும் விடீயோக்களை எளிதில் நீக்குவதற்கு 'டைம்லி கிளீனர்' ஆப் வசதியாக இருக்கும்.

இந்த ஆப்-பில் சென்ட் (Sent), ரிஸீவ்டு (Received), கெப்ட் (Kept) என்று மூன்று வகுப்புகள் இருக்கும். சென்ட் பிரிவில் நாம் அனுப்பிய படங்களும், ரிஸிவ்டு பிரிவில் நாம் பெற்ற படங்களும் சேமிக்கப்படும். கெப்ட் (Kept) பிரிவில் நாம் அழிக்கவேண்டாம் என்று நினைக்கும் விடீயோக்களை சேமிக்கும் வசதி உள்ளதால் நமக்கு தேவையில்லாத விடீயோக்களை அழிப்பது மிகவும் சுலபமாகிறது.

எத்தனை நாட்களுக்கு (7,14,30) ஒருமுறை கிளீன் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இமேஜ், வீடியோ, GIF எதை மட்டும் கிளீன் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்யும் வசதி உண்டு. இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து உங்கள் செல்போனை கிளீனாக வைத்திருக்கலாமே.

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

ரிமூவ் ஆப்ஜெக்ட்ஸ் (Remove Object - Photo Eraser)

அழகாக சிரிக்கும் உங்கள் குடும்பப் புகைப்படத்தில் திருஷ்டி பொட்டாக உங்களுக்கு தேவையில்லாத பொருளோ அல்லது ஆளோ நின்று படத்தின் அழகை கெடுக்கிறார்களா? இன்ஸ்டால் செய்யுங்கள், 'ரிமூவ் ஆப்ஜெக்ட்ஸ் - போட்டோ எரேசர்' என்ற ஆப். இந்த ஆப் கொண்டு புகைப்படத்தில் காட்சி அளிக்கும் தேவையில்லாத பொருட்களை நீக்கிவிட்டு அழகான புகைப்படத்தை பெறலாம்.

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

ஸ்டாப் ஆட் (StopAd)

யூடியூபில் மும்முரமாக படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது காஜல் அகர்வால் கதவை உடைத்துக் கொண்டு வந்து 'உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா?' என்று எரிச்சல் ஊட்டுகிறாரா? அல்லது 'உங்க டாய்லெட் சுத்தமா இருக்கா?' என்று அப்பாஸ் வருகிறாரா? கவலையை விடுங்கள். 'ஸ்டாப் ஆட்' என்னும் இந்த ஆப் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ஸ்கைப் போன்ற வலைத்தளங்களில் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சியை முழுதாகப் பார்க்க உதவுகிறது.

மேலும், இந்த விளம்பரங்களைத் தவிர்த்து மொபைல் டேட்டாவை சேமிக்க உதவுகிறது. விளம்பர தடுப்பு ஆப்-களில் இது ஓரளவு நன்றாக செயல்படுகிறது என்பது உபயோகித்தவர்கள் கருத்து. பேட்டரியும் அதிகம் வீணாவதில்லை. அப்புறம் என்ன.... ஸ்டாப் ஆட்-ஐ உங்க செல்போனில் ஆட் செய்து வேண்டாததை ஸ்டாப் செய்யுங்கள். இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் இல்லாததால் https://stopad.io/y/eg என்ற முகவரியில் டவுன்லோட் செய்யவும்.

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

மேக் யூஸ் ஆஃப் (Makeuseof)

டெக்னாலஜி பற்றிய பல்வேறு விஷயங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினால் இந்த ஆப்-ஐ உங்கள் செல்போனில் டவுன்லோட் செய்யுங்கள். உங்களின் அறிவியல் - தொழில்நுடபம் சார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடைகளை தாங்கி வருகிறது இந்த ஆப். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. ஆப் உள்ள போதே கற்றுக்கொள் என்பது புதுமொழி. இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

நத்திங் (Nothing)

'நத்திங்' என்று பெயரைப் பார்த்தவுடன் 'சம்திங்' இருக்கும் என்று ஆர்வமாக திறப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசு 'நத்திங்'. கையில் எடுத்த ஃபோனைக் கீழே வைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? அல்லது கஷ்டப்பட்டு கீழே வைத்த ஃபோனைக் கையில் எடுக்காமல் இருக்க முடியவில்லையா? அப்படியென்றால் இந்த ஆப் உங்களுக்கு மிகவும் அவசியம்.

மனிதன் வைக்கும் ஆப்பிலும் ஒன்றும் இல்லை, அதேபோல் அவன் கண்டுபிடிக்கும் ஆப்-பிலும் ஒன்றும் இல்லை. வாழ்க்கையில் நமக்கு கடைசியில் மிஞ்சுவது ஒன்றுமில்லை என்பதை சூசகமாக நிரூபிப்பதே இந்த ஆப். இதுக்கு ஒரு ஆப்பா என்று யோசிக்க வேண்டாம். மக்கள் மனதில் நின்ற ஆப்களில் இதுவும் ஒன்று. ப்ளே ஸ்டோரில் நத்திங் (Nothing) உள்ளது.

இந்த ஆப்-களை இப்போது உங்கள் கைபேசியில் உயிரோட்டம் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்து ஆப் டக்கரா? இல்லையா? என்று கமெண்ட் செய்யுங்களேன். அதேபோல் உங்களுக்குத் தெரிந்த உருப்படியான ஆப் பற்றிய விவரங்களையும் கமெண்டில் பகிரலாமே!

- சிவசங்கரி கோமதி நாயகம்

உங்கள் உபயோகத்துக்கு உருப்படியான 5 ஆப்-கள்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP