நாளைக்கு 'சூப்பர் மூன்'..! மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு நாளை(பிப்ரவரி 19) நிகழ இருக்கிறது. நாளை பெளர்ணமி அன்று இரவு 9.30 மணி அளவில் இது நிகழும். மற்ற நாட்களை விட நிலவு மிகவும் பெரிதாகவும், நமக்கு மிக அருகிலும் தோன்றும்.
 | 

நாளைக்கு 'சூப்பர் மூன்'..! மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு நாளை(பிப்ரவரி 19) நிகழ இருக்கிறது. நாளை பெளர்ணமி அன்று இரவு 9.30 மணி அளவில் இது நிகழும். இதனை நாம் வெறும் கண்களாலே காண முடியும்.

சாதாரண பௌர்ணமி நாட்களிலேயே அழகாக தெரியும் நிலவு, நாளை சூப்பர் மூன் நிகழ்வின் போது மற்ற நாட்களை விட நிலவு மிகவும் பெரிதாகவும், நமக்கு மிக அருகிலும் தோன்றும்.

சரி இந்த சூப்பர் மூன் என்றால் என்ன? 

பூமியின் துணைக்கோளான சந்திரன்(நிலவு) பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, நிலவுக்கு ஒரு புள்ளியில் மிக அருகிலும், ஒரு புள்ளியில் நீண்ட தொலைவிலும் வரும். அவ்வாறு நிலவு அருகில் வரும்போது, அன்றைய தினம் பௌர்ணமியாக இருக்கும் பட்சத்தில், நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும். அதுவே பெரு நிலவு(super moon) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு சூப்பர் மூன்கள் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மிகத் தெளிவாகத் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. வரும் 19ம் தேதி மிக அருகில் தோன்றும் சூப்பர் மூன் பார்க்க தவறவிட்டால் அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2026ல் தான் பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சூப்பர் மூனை மிஸ் பண்ணிடாதீங்க..

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP