விண்வெளி உணவகத்தில் சாப்பிட ஆசையா? முன்பதிவு தொடங்கியது

விண்வெளியில் இங்கிலாந்து நிறுவனம் கட்டமைத்துவரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
 | 

விண்வெளி உணவகத்தில் சாப்பிட ஆசையா? முன்பதிவு தொடங்கியது

விண்வெளி உணவகத்தில் சாப்பிட ஆசையா? முன்பதிவு தொடங்கியதுவிண்வெளியில் இங்கிலாந்து நிறுவனம் கட்டமைத்துவரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த உணவகத்துக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல அரோரா ஸ்டேஷன் முடிவு செய்துள்ளது. 

விண்வெளி உணவகத்தில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. பூமியிலிருந்து 320 கி.மீ தொலைவில் அமைக்கப்படும் இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாகவே பார்க்க முடியும்.

விண்வெளி உணவகத்துக்கு செல்ல விரும்புவோர், park.com என்ற இணையதளத்திற்கு சென்று, 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி உணவகத்தில் தங்க ஒரு நபருக்கு 9.5 மில்லியன் டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் விண்வெளியில் தங்குவதற்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP