இன்று சந்திர கிரகணம்...என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வு சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக வருடத்திற்கு இரண்டு முறை பாதி சந்திர கிரகணம் தோன்றும். ஆனால், முழு சந்திரகிரகணத்தை காண்பது என்பது அரிதான நிகழ்வு. இந்த முழு சந்திர கிரகணம் இன்று உலகின் பல்வேறு இடங்களில் நிகழ இருக்கிறது.
 | 

சந்திர கிரகணம்... என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வு சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக வருடத்திற்கு இரண்டு முறை பாதி சந்திர கிரகணம் தோன்றும். ஆனால், முழு சந்திரகிரகணத்தை காண்பது என்பது அரிதான நிகழ்வு. இந்த முழு சந்திர கிரகணம் இன்று உலகின் பல்வேறு இடங்களில் நிகழ இருக்கிறது. 

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணிவரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. 

முழு சந்திர கிரகணத்தையடுத்து 'இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என நமது முன்னோர்கள்' அறிவியல் சார்ந்து சிலவற்றை வகுத்து வைத்துள்ளனர். அவை என்னென்ன? 

கிரகண நேரத்தில் செய்யக்கூடாதவை: 

►  கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளி விழித்திரையை பாதிக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை விட இரவில் தோன்றும் சந்திர கிரகணம் அவ்வளவு வீரியமாக இருக்காது எனவே சந்திரனை பார்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. 

►  கிரகணத்தின்போது கதிர்வீச்சு வெளிபாடு அதிகம் இருக்கும், அது உயிரினங்களின் தோல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் வராமல் இருப்பது நல்லது.

►  சந்திரகிரகணத்தின் போது தண்ணீர் கூட அருந்தாமல் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால், கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு கிரகணத்திற்கு முன் விஷமாக மாறி விடுவதாக மூடநம்பிக்கையுள்ளது. உண்மையில் வயிறு நிறைய சாப்பிட்டால் நாம் அமைதியாக ஆழ்ந்த தெய்வ சிந்தனையுடன் இருக்க மாட்டோம், சந்திர கிரகணத்தின் போது ஆழ்ந்த தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதால் தான் உணவருந்த கூடாது என கூறுகின்றனர். 

►  உண்மையில் கிரகணத்தின் போது, மற்ற நாட்களை விட சமைத்த உணவு அதிவிரைவாக சிதைவுறும். ஆதலால் கிரகணத்திற்கு முன் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூறுகின்றனர். 

►  கிரகணம் என்பது தோஷ காலமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் கோயில்களில் வழிபாடுகள் நடக்காது. எனவே கிரகணத்தின் போது கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP