2024-இல் விண்ணைத்தாண்டி பிறக்க போகும் முதல் குழந்தை

ஸ்பேஸ் லைஃப், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், 2024-ஆம் ஆண்டு விண்வெளியில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் ஆராய்ச்சியை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சிகாக பெண் தன்னார்வளரையும் தேடி வருகிறது
 | 

2024-இல் விண்ணைத்தாண்டி பிறக்க போகும் முதல் குழந்தை

ஸ்பேஸ் லைஃப், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், 2024-ஆம் ஆண்டு விண்வெளியில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் ஆராய்ச்சியை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சிகாக பெண் தன்னார்வளரையும் தேடி வருகிறது.

மனித இனமானது பூமியில் மட்டும் இல்லாமல் பல கோள்களில் வாழும் உயிரினமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் விண்வெளியில் குழந்தை பெற்றெடுக்கும் முறையை அறிந்து இருக்க வேண்டும். அதற்கான ஒரு முயற்சியாக இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என ஸ்பேஸ் லைஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கீஸ் மல்டர் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு, ஸ்பேஸ்-என்பிரியோ-இன்குபேட்டர் என்னும் கருவி மூலமாக விந்து மற்றும் கருமுட்டைகள் விண்ணுக்கு அனுப்பப்படும். நான்கு நாட்களுக்கு பிறகு அந்த இன்குபேட்டர் பூமிக்கு திரும்பும். பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆராய்ச்சி செய்யப்படும்.

2022-ஆம் ஆண்டு ஆராய்ச்சிகாக ஒரு பெண் தன்னார்வளர் தேர்ந்து எடுக்கப்படுவார். அவருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

2024-ஆம் ஆண்டு, குழந்தை பிறக்கும் தருவாயில் கருவுற்று அந்த பெண், விண்கலம் மூலமாக விண்ணுக்கு கொண்டு செல்லப்படுவாள், பின்னர் பூமியில் இருந்து 500 கிமீ தூரத்தில், அந்த பெண்ணுக்கு விண்கலத்தில் பிரசவம் பார்க்கப்படும். இந்த முயற்சியில் சிறு தவறுக் கூட நடக்காமல் இருக்க உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் குழுவும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்க்கான செலவும் கணக்கிடப் பட்டுள்ளது என ஸ்பேஸ் லைஃப் நிறுவனர் கீஸ் மல்டர் தெரிவித்துள்ளார்.     


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP