இயற்கையின் ஐந்தாவது சக்தி "எக்ஸ் 17" - ஹங்கேரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!

இயற்கையில் ஐந்தாவது சக்தியை காட்டும் ஓர் அணுசக்தி பரிசோதனையின் கண்டுபிடிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளனர் ஹங்கேரி அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள்.
 | 

இயற்கையின் ஐந்தாவது சக்தி "எக்ஸ் 17" - ஹங்கேரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!

இயற்கையில் ஐந்தாவது சக்தியை காட்டும் ஓர் அணுசக்தி பரிசோதனையின் கண்டுபிடிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளனர் ஹங்கேரி அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதர்களின் தற்போதைய புரிதலின் படி, பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் நான்கு சக்திகள் ஈர்ப்பு, மின்காந்தவியல், பலவீனமான அணுசக்தி மற்றும் வலுவான அணுசக்தி ஆகியவையே ஆகும். இந்நிலையில், பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் ஐந்தாவது சக்தி இருக்கக்கூடும் என்பது ஹங்கேரி ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

"எக்ஸ் 17" என்று அழைக்கப்படும் இந்த புதிய துகள், ஹீலியம் அணு சிதைந்து போகும் நிலையில் ஒளியை ஏற்படுத்துவதன் காரணமாக வெளியிடப்படுவதாக தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ச்சியாளர்கள் "ப்ரோட்டோபோபிக் சக்தி" என்று விளக்குகின்றனர். அதாவது, இந்த துகள்கள் ப்ரோட்டான்களுக்கு பயந்தவை என்பதையே அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

எலக்ட்ரான்கள் மற்றும் பாசிட்ரான்கள் அணுவிலிருந்து 140 டிகிரியில் உடைவது, இயற்கையில் மேலும் சில சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகங்கத்தை தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை தொடர்ந்து, இர்வின் கவிஃபோர்னியா பல்கலைகழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியர் ஜொனாதன் ஃபெங் கூறுகையில், பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் இத்தகைய சக்திகள் இந்த ஐந்தாவது ஒன்றுடன் நிற்க போவதில்லை என்றும், இதன் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நிச்சயம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து, இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானி கிராஸ்னாஹோர்கே கூறுகையில், நமது கண்களுக்கு புலப்படும் உலகத்தை, டார்க் மேட்டர்களுடன் இணைக்கும் ஓர் துகளாக எக்ஸ் 17 இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP