நூற்றாண்டின் அதிசய சந்திர கிரகணத்தைக் காண தயாரா?

வருகின்ற ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் இந்த வருடத்தின் மிக நீளமான சந்திரகிரகணம் நடைபெற உள்ளது.
 | 

நூற்றாண்டின் அதிசய சந்திர கிரகணத்தைக் காண தயாரா?

இந்த நூற்றாண்டின் அதிசயமான  நீண்ட சந்திர கிரகணம் நிகழ்வதற்கு  இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது . வருகின்ற ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் இந்த வருடத்தின் மிக நீளமான சந்திரகிரகணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 48 நிமிடங்களுக்கு நடைபெறுமாம். இந்த அதிசய நிகழ்வோடு மற்றொரு அதிசய நிகழ்வும் நடைபெற இருக்கிறது. அது என்னவென்றால் 'ப்ளட் மூன்'.  கிரகணத்தின் போது சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவில் பூமி  பயணிக்கும். அந்த சமயத்தில் பூமியின் படும் சூரியக் கதிர் பிரதிபலிப்பு நிலவில் விழும். இதனால் பால் நிலா அந்த குறிப்பிட்ட நேரம் மட்டும் சிவப்பு நிலாவாகத் தெரியும். இதையே ப்ளட் மூன் என்கின்றனர்.

இந்தியாவில் இந்த  நிகழ்வு இரவு 11.54 மணி அளவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிசய நிகழ்வினை இந்தியா முழுவதும் பார்க்க இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவிலும் இந்த நீண்ட சந்திர கிரகணத்தை காணலாம். இந்த அதிசய நிகழ்வான செவ்வாய் கிரகம் ஜூலை 31ம் தேதி பூமிக்கு வெகு அருகில் பயணிக்க இருக்கிறது. இந்நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் மிக அறிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நீண்ட சந்திரகிரகணத்தை அடுத்து நீங்கள் காண ஜூன் 9, 2123ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் மருத்துவ தொழில்நுட்பத்தின்படிக் கூட அத்தனை ஆண்டுகள் உயிர்வாழ்வது சாத்தியமில்லை. அதனால், தூக்கத்துக்கு இடம் கொடுக்காமல், வானில் நடக்கும் மிகமிக அரிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாமே!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP