பிப். 6ல் ஜிசாட்-31 செயற்கைகோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

விண்வெளித்துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ 40வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை வருகிற பிப்ரவரி 6ம் தேதி விண்ணில் ஏவுகிறது.
 | 

பிப். 6ல் ஜிசாட்-31 செயற்கைகோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

விண்வெளித்துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ 40வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை வருகிற பிப்ரவரி 6ம் தேதி விண்ணில் ஏவுகிறது.

'இஸ்ரோ' என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளித்துறையில் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் இதுவரை இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பல்வேறு விதமான செயற்கைக்கோளை அனுப்பி வருகிறது. 

இந்நிலையில்,  40வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை வருகிற பிப்ரவரி 6ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இந்த செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கௌரூவ் இருந்து கனரக ‘ஏரியன்-5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2K Bus’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள். இந்தியாவின் மையப்பகுதி மற்றும் இந்தியாவில் உள்ள தீவுகள் குறித்து புகைப்படங்களை அனுப்பும். 

‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச் டெலிவிஷன் மற்றும் செல்போன் சேவைகளுக்கு பயன்படும்.

இதுதவிர அரபிக்கடல், இந்தியபெருங்கடல், வங்கக்கடல் முழுவதும் கண்காணித்து அடங்கிய தகவல்களை சேகரிக்கும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP