புதன் கிரகத்திற்கு இந்த ஆண்டு புதிய செயற்கை கோள்!

புதன் கிரகத்திற்கு இந்த ஆண்டு புதிய கோள்!
 | 

புதன் கிரகத்திற்கு இந்த ஆண்டு புதிய செயற்கை கோள்!


சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தை (Mercury) பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக புதிய செயற்கைக் கோள் ஒன்று இந்த ஆண்டு அனுப்பப்படுகிறது. 

ஏற்கனவே, 'மரைனர் 10' என்ற கோள் 1974ம் ஆண்டு புதன் கிரகத்தை தாண்டி வந்தது. அப்போது தான் முதன்முதலாக அந்த கிரகத்தை சுற்றி காந்தப்புல மண்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய், வெள்ளி போன்ற கிரகங்களை சுற்றி காந்த மண்டலம் இல்லாததால், இது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மெசெஞ்சர் என்ற செயற்கைக் கோள் 2009ம் ஆண்டு புதன் கிரகத்திற்கு அருகே சுற்றி வந்தது. அந்த கோள், புதன் கிரகத்தின் துருவங்களின் அடியில் பனி இருப்பதை கண்டறிந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு புதன் கிரகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள புதிய செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகம் மற்றும் ஜப்பான் நாட்டு விண்வெளி கழகம் ஆகியவை இணைந்து, 'பெபிகொலம்போ' என்ற செயற்கைக் கோளை அனுப்புகிறார்கள். பெபிகொலம்போ புதன் கிரகத்தை சென்றடைய 7 வருடங்கள் ஆகுமாம். அதனுள் இரண்டு கோள்கள் இருக்குமாம். இரண்டும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் இருந்து தனித்தனியே புதனின் தன்மைகளை கண்டறியுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP