நிலவுக்கு செல்ல தனியார் நிறுவனங்களை நம்பியுள்ள நாசா!

மீண்டும் நிலவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ள நாசா, பல்வேறு தனியார் நிறுவனங்களும் கூட்டணி அமைத்து, பல பில்லியன் டாலர் மதிப்பிலான கான்ட்ராக்ட்களை உருவாக்கியுள்ளது. இதற்காக 9 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.
 | 

கடைசியாக 1972ம் ஆண்டு, நிலவுக்கு மனிதனை அனுப்பிய நாசா நிறுவனம் அதன் பிறகு தன்னுடைய நிலவு ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து நாசாவுக்கு சொந்தமான எந்த விண்கலமும் நிலவுக்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் நிலவுக்கு செல்லும் திட்டங்களை தூசு தட்டியுள்ளது நாசா. இந்த போட்டியினால் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தும் என்றும், அதனால், விண்கல தொழில்நுட்பங்களுக்கு ஆகும் செலவு குறையும் என நாசா எதிர்பார்க்கிறது.

இதற்காக 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில், சுமார் 10 ஆண்டுகள் வரையிலான காண்டராக்ட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கான்டராக்டுகளை பெற, 9 தனியார் நிறுவனங்கள் போட்டியில் உள்ளனவாம்.

முன்னாள் அதிபர் ஒபாமாவின் தலைமையில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதை தனது முதல் குறிக்கோளாக நாசா வைத்திருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் அரசு, மீண்டும் நிலவில் பல திட்டங்களை செயல்படுத்த நாசாவுக்கு ஆதரவளித்துள்ளதாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP