பனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகில் வெப்பத்தால் உருகும் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வில் களமிறங்கியுள்ளது
 | 

பனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகில் வெப்பத்தால் உருகும் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வில் களமிறங்கியுள்ளது.

உலக வெப்பமயதால் காரணமாக, பூமியின் பனிபாறைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்களைக் கண்டறிவதற்காக பில்லியன் டாலர் மதிப்புள்ள செயற்கைக் கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைக்கவுள்ளது. அந்த செயற்கைக்கோளை, பூமியின் வட-தென் துருவங்களுக்கு நேர் மேலுள்ள சுற்றுப் பாதையில் நாசா நிலைநிறுத்தவுள்ளது. உரிய சுற்றுப்பாதையில் சுழலவிடப்பட்ட பின்னர், அது கடலிலும் நிலத்திலும் உள்ள பனிப் பாறைகளின் அடர்த்தியை அளவிடும்.

துணைக் கோளத்திலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, பனிப்பாறைகளின் மீது பட்டு எதிரொலிக்க ஆகும் நேரத்தைப் பொறுத்து பனிப் பாறைகளின் அடர்த்தி கணக்கிடப்படும். இதன்மூலம் ஏன் இவ்வளவு வேகமாக பனிப்பாறைகள் உருகுகின்றன என்பதை அறிய முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP