பூமிக்கு அருகில் வரும் நிலா... சந்திர கிரகணம்... எல்லாம் ஒரே நாளில்!

பூமிக்கு அருகில் வரும் நிலா... சந்திர கிரகணம்... எல்லாம் ஒரே நாளில்!
 | 

பூமிக்கு அருகில் வரும் நிலா... சந்திர கிரகணம்... எல்லாம் ஒரே நாளில்!

150 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அரிய வானியல் நிகழ்வு வருகிற 31ம் தேதி நிகழ இருக்கிறது. ஆம், அன்று ஒரே தினத்தில் நிலவில் மூன்று நிகழ்வுகள் நடக்க உள்ளன. வழக்கத்தை விட மிகப்பெரியதாகக் காட்சி அளிக்கும் நிலவை காணத் தவறாமல் இருக்க உங்கள் மொபைல் ரிமைன்டரில் இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள். 

இந்த மாதத்தின் முதல் நாள், நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. அதைக் காட்டிலும் நெருக்கமாக வருகிற 31ம் தேதி வர இருக்கிறது. இதைச் சூப்பர் மூன் என்று சொல்வார்கள். அதேநேரத்தில், சந்திர கிரகணமும் அன்று நிகழ இருக்கிறது. பூமியின் நிழல் நிலவில் விழும்போது நிலவு மறைந்து நீல நிலாவாகத் தெரியும். இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒரே நாளில் காணலாம் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள். 31ம் தேதி நள்ளிரவு கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணம் தெரியுமாம்.

தமிழகத்தில், மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை நிகழவிருக்கிறது. 31ம் தேதி நிலவு வழக்கத்தைக் காட்டிலும் 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக வெளிச்சத்துடனும் தெரியும் என்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது போன்ற ஒரு நிகழ்வு அடுத்த 150 ஆண்டுகளில் காண முடியாது. எனவே, இதை மிஸ் செய்துவிடாதீர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP