காணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ!

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த மார்ச் 29ம் தேதி வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருந்திய ஜிஎஸ்எல்வி எஃப் 08  ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் பன்முக எஸ்-பேண்ட், ஒருமுக சி-பேண்ட் அலைவரிசையை கொண்டது. இதன்மூலம் வானிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும். 

காணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ!

விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைகோள் ஏப்ரல் 1ம் தேதி அன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தகவல் தொடர்பை மீண்டும் பெறுவதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து செயற்கைகோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று(ஏப்ரல்.3) இஸ்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டாக்டர் சிவன் இதுகுறித்து தெரிவித்ததாவது: ட்ரேக்கிங் சிஸ்டம் உதவியுடன் செயற்கைகோள் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைகோள் செல்லும் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சந்திரயான்-2 ஏவுவதற்கு முன்பாக IRNSS-1H, GSAT-11, Mk III D2 உள்ளிட்ட  செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP