இன்று சந்திர கிரகணம்: இந்தியாவில் எப்போது தெரியும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி (ஐஎஸ்டி) இன்று இரவு 10:37 மணிக்கு ஆரம்பிக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் கிரகணத்தை, இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
 | 

இன்று சந்திர கிரகணம்! தமிழகத்தில் எப்போது தெரியும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்,  இந்திய நேரப்படி (ஐஎஸ்டி) இன்று இரவு 10:37 மணிக்கு ஆரம்பிக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் கிரகணத்தை, இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. 

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும்போது, பூமி, சூரியனை  பகுதி அளவாகவோ, முழுமையாகவோ மறைக்கும். இது நிலவில் எதிரொலிக்கும் அற்புத நிகழ்வு தான் சந்திர கிரகணமாகும்.

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு 2.42 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும். இன்று நள்ளிரவு 12.41 மணியளவில் சந்திர கிரகணம் அதன் முழுமையான அளவை எட்டும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிவியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP