செவ்வாய் கிரகத்தில் ஏரி! உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரபளவில் எரி கண்டுபிடிப்பு
 | 

செவ்வாய் கிரகத்தில் ஏரி! உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியம் இருகிறதா என்பதை கண்டறிய பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரியை கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற செயற்கைக்கோள் இந்த ஆராய்சிக்காக பயன்படுத்த பட்டது. இந்த செயற்கைக்கோள் சில புகைப்படங்களை அனுப்பியது. அதை  ஆராய்ந்து பார்த்த போது  சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் நடத்திய ஆராய்ச்சிகள் எல்லாம் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கான சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில் முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். "இது அநேகமாக மிகப்பெரிய ஏரி அல்ல ஒரு சிறிய ஏரித்தான் " என்று ஆய்வு நடத்திய இத்தாலிய தேசிய கல்வி நிறுவனத்தின் ஆஸ்ட்ரோஃபிக்ஸ் துறையின் பேராசிரியர் ராபர்டோ ஓரோஸி கூறுகிறார்.

இந்த கண்டறியப்பட்ட ஏரியின் ஆழத்தை கணிக்கமுடியவில்லை. ஆனால் ஆராய்ச்சிக் குழு அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. "இது உண்மையிலேயே தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் என்ற தகுதியை கொண்டுள்ளது. பூமியில் பனிகட்டிகள் உருகும் போது தோன்றும் சிறு குட்டை போல் அல்லாமல் இது ஒரு ஏரி என்று சொல்லாம் . " என்று கூறுகிறார் பேராசிரியர் ஓரோஸி.

இந்த ஏரியில் இருக்கும் பனி படலத்தில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இத்தாலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதனால், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP