வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் -31 செயற்கைக்கோள்!

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களின் வரிசையில் 40-வது செயற்கைக்கோளான "ஜிசாட்-31" இன்று அதிகாலை 2:30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
 | 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் -31 செயற்கைக்கோள்!

இந்தியாவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களின் வரிசையில் 40-வது செயற்கைக்கோளான "ஜிசாட்-31" இன்று அதிகாலை 2:30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரெஞ்ச் கயானாவில் உள்ள கௌரூவ்  ஏவுதளத்திலிருந்து ஏரியன் -5 ராக்கெட் மூலம் இச்செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 2,345 கிலோ எடை கொண்ட ஜி-சாட் 31 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும்.

இந்தியாவின் மையப்பகுதி மற்றும் தீவுகளை  புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் பணியை இச்செயற்கைகோள் மேற்கொள்ளும்.

மேலும், விசாட் நெட்வொர்க், டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச் டெலிவிஷன், செல்போன்  உள்ளிட்ட சேவைகளுக்கும் ஜிசாட்-31 பயன்படும்.

இதுதவிர அரபிக்கடல், இந்தியபெருங்கடல் மற்றும் வங்கக்கடல் தொடர்பான தகவல்களையும் இதன் மூலம் பெறலாம் என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP