இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் சந்திரயான் -2 அனுப்பும் இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, விரைவில் சந்திரயான் -2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்புகிறது. இந்த செயற்கைகோள் திட்டம் ஹாலிவுட் படம் இன்டர்ஸ்டெல்லரை விட குறைந்த விலையில் நடத்தி முடிக்கப்படுமாம்.
 | 

இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் சந்திரயான் -2 அனுப்பும் இஸ்ரோ!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, விரைவில் சந்திரயான் -2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்புகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம், நிலவில் தானியங்கி 'ரோவர்' ஒன்றை முதன்முறையாக நம் விஞ்ஞானிகள் செயல்படுத்த உள்ளதால், சந்திரயான்-2 மீது அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு ஏவப்பட உள்ள நிலையில், சந்திரயான் 2 பற்றிய சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 'இன்டர்ஸ்டெல்லார்' என்ற ஹாலிவுட் விண்வெளி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அந்த படம், சுமார் ரூ.1,050 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.

சந்திரயான் -2 செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோவுக்கு 800 கோடி ரூபாய் தான் செலவகுமாம். இந்த தகவல் வெளியானவுடன், உலகம் முழுவதும் சமூக வளைதளங்களில் நெட்டிசன்கள் இஸ்ரோ புகழ் பாடி வருகின்றனர். மற்ற நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் செலவழிப்பதில் ஒரு சிறிய பங்கு மட்டுமே இஸ்ரோவுக்கு நிதியாக வழங்கப்படுகிறது. இருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர். 

கடந்த 2013ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளுக்கு ரூ.470 கோடி செலவான அதேநேரம், பிரபல ஹாலிவுட் படமான 'கிராவிட்டி', சுமார் ரூ.650 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் இஸ்ரோவின் பெருமை உலகம் முழுவதும் பேசப்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP