31 செயற்கைக் கோள்களை அனுப்புகிறது இஸ்ரோ!

31 செயற்கைகோள்களை அனுப்புகிறது இஸ்ரோ!
 | 

31 செயற்கைக் கோள்களை அனுப்புகிறது இஸ்ரோ!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் அடுத்த வாரம், 31 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. முதலில் ஜனவரி 10ம் தேதி கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்ட நிலையில், தற்போது அதை, 12ம் தேதியாக மாற்றியுள்ளனர். 

"கார்டோசாட் ரக சாட்டிலைட் உட்பட, 31 கோள்களை அனுப்புகிறோம். அவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுடைய கோள்கள் 28 ஆகும். ஜனவரி 12ம் தேதி காலை 9.30 மணிக்கு ராக்கெட் ஏவப்படும். எங்கள் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனவரி 10ம் தேதி ஒரு குறியீடாக தான் முதலில் முடிவு செய்யப்பட்டது" என இஸ்ரோ மக்கள் தொடர்பு இயக்குனர் தேவி பிரசாத் கர்னிக் தெரிவித்தார். 

பி.எஸ்.எல்.வி-சி40 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP