Logo

'இது வேற்றுகிரக வாசிகள் அனுப்பியதா?' ஹார்வர்டு ஆராச்சியாளர்கள் பகீர்!

நமது சூரிய குடும்பத்திற்குள் வந்துள்ள ஒரு எரிகல் போன்ற பொருள், நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு, வேற்றுகிரக வாசிகள் அனுப்பிய விண்கலமாக கூட இருக்கலாம் என பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இதுவரை கண்டிராத ஒரு விண்கல் போன்ற பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தொடர் ஆராய்ச்சிகளுக்கு பிறகு, அந்த பொருள், நீளமான கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிக நீளமாகவும், அகலம் கம்மியாகவும் இருக்கும் இந்த பொருளுக்கு, ஒளமுவாமா என பெயரிடப்பட்டது. சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளமுவாமா சென்று கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து ஆராச்சியாளர்கள் அதை ஆய்வு செய்து வரும் நிலையில், சூரியனின் ஈர்ப்பு சக்தியை மீறி அது அடிக்கடி பாதை மாறுவது தெரிய வந்துள்ளது. அதேபோல அதன் வேகமும் அடிக்கடி அதிகரித்து வருகிறது. இவை அனைத்துக்கும் காரணம் சரியாக தெரியாத நிலையில், அது வேற்றுகிரக வாசிகள் அனுப்பிய விண்கலமாக கூட இருக்கலாம் என ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

"வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள், விண்வெளியை குறித்து ஆராய்ச்சி செய்ய கூட ஒளமுவாமாவை அனுப்பியிருக்கலாம்" என ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த ஆப்ரஹாம் லோப் தெரிவித்துள்ளார். இதுவரை கண்டிராதவாறு ஒளமுவாமா நகர்வதாகவும், இதுபோன்ற பொருட்களை இதற்கு முன் தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், "ஒளமுவாமா பற்றி தீர்க்கமான எந்த ஆதாரங்களும் இல்லை. அதற்காக தான் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார் லோப்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP