விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி -43 ராக்கெட்!

பூமியை துல்லியமாக கண்காணிக்கும் ஹைசிஸ் செயற்கைகோள் உள்ளிட்ட 31 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
 | 

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி -43 ராக்கெட்!

பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள் உள்ளிட்ட 31 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -43 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கியது. சுமார் 28 மணி நேரங்களுக்கு பிறகு இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. 

பூமியின் நிலப்பகுதி, வானிலை உள்ளிட்டவற்றை துல்லியமான புகைப்படங்களாக கொடுக்கும் ஹைசிஸ் (HysIS) என்ற இந்தியாவின் செயற்கைகோளுடன் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 8 வெளிநாடுகளின் 30 செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. 

ஹைசிஸ் செயற்கைகோளின் எடை 380 கிலோ. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். புவி வட்டப் பாதையில் ஹைசிஸ் 630 கிமீ தொலைவில் நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டு செயற்கைகோள்கள் 504 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

ஒரே மாதத்தில் இஸ்ரோ மேற்கொண்ட 2வது விண்வெளித்திட்டம் இதுவாகும். பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரோவிற்கு இதுவும் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP