சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 நாட்டு விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நாடுகளை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி ஓடத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளனர். 6 மாதம் அங்கு தங்கியிருந்தது மூவரும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர்.
 | 

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 நாட்டு விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நாடுகளை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் MS-11 விண்வெளி ஓடத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளனர். 6 மாதங்கள் அங்கு தங்கியிருந்தது மூவரும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். 

அக்டோபர் மாதம், ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் கிளம்பிய ரஷ்ய விண்வெளி ஓடம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விண்வெளி கழகம், சோயுஸ் விண்கலம் மூலம், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டது. 

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.31க்கு, 3 விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் MS-11 விண்கலம் கசகஸ்தானில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆன் மெக்லைன், கனடாவை சேர்ந்த டேவிட் செயின்ட் ஜாக்கஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஒலெக் கொனனெக்கோ ஆகிய மூவரும் அனுப்பப்பட்டனர். சுமார் 6 மணி நேர பயணத்திற்கு பிறகு, சர்வதேச விண்வெளி ஓடத்தை அவர்கள் சென்றடைந்தனர்.

அதன்பின், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஐஎஸ்எஸ்-சின் கதவுகள் திறக்கப்பட்டது. அங்கு தங்கியுள்ள அமெரிக்காவின் செரினா சான்சலர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் க்ரேஸ்ட் மற்றும் ரஷ்யாவின் செர்கெய் ப்ரோகோப்யேவ் ஆகியோர் புதிய ஆராய்ச்சியாளர்களை வரவேற்றனர். அவர்கள் மூவரும் டிசம்பர் 20ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின், புதிய வீரர்கள் மூவரும், 6 மாதங்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு ஆராச்சிகளில் ஈடுபட இருக்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP