எக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா...

 | 

எக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா...

2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த செயற்கைக்கோளை நாசா அனுப்புகிறது. இந்த முறை அங்கு உயிரினங்கள் உள்ளனவா இல்லையா என்பதை குறித்து ஆய்வு செய்ய எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது. இதுவரை செவ்வாய் அனுப்பப்பட்ட ஒவ்வொரு செயற்கைகோளிலும், ஒரு சிறிய பகுதியை மேலிருந்து மொத்தமாக ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை கையாண்டு வந்தது நாசா. இதன்மூலம் செவ்வாயில் உள்ள மிகச் சிறிய வேதியல் நுணுக்கங்களை கண்டறிய முடியாது. எனவே இப்போது எக்ஸ்ரே-யை கொண்டு ஆராய உள்ளனர். "இதுவரை, தண்ணீர், பழங்கால உயிரினங்கள் வாழ்ந்த தடம், என ஒரு குறுகிய வட்டத்திலேயே ஆய்வு செய்து வந்தோம். எங்களது அடுத்த திட்டத்தின்படி, நுண்ணுயிர்களை தேடுவது, அதிநவீன தொழில்நுட்ப படங்கள் மூலம் செவ்வாயின் முக்கிய பகுதிகளை வரையறுப்பது போன்றவற்றை செய்ய உள்ளோம்," என ஒரு நாசா விஞ்ஞானி கூறினார். இதற்காக எக்ஸ்ரே, ப்ளோராசன்ஸ், ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். மேலும், செவ்வாயில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP