போலியோ தடுப்பூசியை ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாளின்று

போன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாக்கியது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கிப் போயிற்று.
 | 

போலியோ தடுப்பூசியை ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாளின்று


கடந்த நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாக்கியது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டுமொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கிப் போயிற்று. 

குறிப்பாக நம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆரோக்கியத்துக்கே ஓப்பன் சவால் விட்டது. இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. 

அதனால், இந்த நோய்க்கு 'டாட்டா பை பை' சொல்ல பல்வேறு மெடிக்கல் டீம்  களத்தில் இறங்கியது. முக்கியமாக, அமெரிக்கா, போலியோவுக்கு எதிராக தடுப்பு மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நிதியை ஒதுக்கி உதவியது. அது வீண்போகவில்லை.


இதற்கிடையில் தான் 1952ல், ஜோனஸ் சால்க் (Jonas Salk) என்கிற அமெரிக்க டாக்டர் இந்த நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். 

ஆனால் போலியோ கிருமிகளில் மூன்று துணை இனங்கள் உண்டு. அவற்றைக் கொன்று, வீரியமிழக்கச் செய்து, குரங்கின் சிறுநீரகத் திசுக்களில் வளர்த்து தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். 

இன்னொரு சிக்கல் என்னன்னா அவருடைய காலத்தில் உயிருள்ள கிருமிகளை வைத்துத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முறை தான் நடைமுறையில் இருந்தது. அதனால் அவரால் பரிசோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் ஆறு குழந்தைகள் இறந்துவிட்டனர். மூன்று குழந்தைகளுக்கு போலியோ வந்து கால்கள் முடமாயிற்று. எனவே, பரிசோதனைக்கு நோயாளிகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.


இதனால் சால்க், தான் கண்டுபிடித்த தடுப்பூசியை தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் முதலில் போட்டுக்கொண்டார். இதன் பலனால் பொதுமக்களுக்கு நம்பிக்கை வந்து, 161 குழந்தைகள் 1953ம் ஆண்டு மார்ச் 26ம் நாள் ஜோனஸிடம் போலியோ தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களுடைய ரத்தத்தில் போலியோவைத் தடுக்கக்கூடிய எதிர் அணுக்கள் உற்பத்தியானதை நிரூபித்தார் ஜோனஸ். எனவே, இவருடைய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்டது. அதன் பிறகுதான் இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கியது. 


இன்னொரு விஷயம் - இந்த கண்டுப்பிடிப்பில் தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. ஆம்.. இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "காப்புரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் காப்புரிமையை கோர முடியுமா?" எனக்கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP