நோட் பண்ணிக்குங்க... சூப்பர் மூன் - ரெட் மூன் தெரியும் நேரம்!

வானில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வது சாதாரணமான விஷயம். ஆனால் தற்போது பல நூற்றாண்டுக்கு பிறகு வானில் இரண்டு அதிசய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 | 

நோட் பண்ணிக்குங்க... சூப்பர் மூன் - ரெட் மூன் தெரியும் நேரம்!

வானில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வது சாதாரணமான விஷயம். ஆனால் தற்போது பல நூற்றாண்டுக்கு பிறகு வானில் இரண்டு அதிசய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

அது என்ன ப்ளூ மூன், ஊதா நிறத்தில் தெரியுமா? என கேட்கலாம். அப்படி இல்லை... மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி நிலவின் பெயர் தான் ப்ளூ மூன் எனப்படும். இந்த வருடத்தின் தொடக்கமான ஜனவரி 31ம் தேதி ப்ளூ மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 150 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படும். ஜனவரி மாதத்தையடுத்து  மார்ச் மாதம் மீண்டும் ஒரு ப்ளூ மூன் தோன்றியது. ஒரு வருடத்தில் இரண்டு ப்ளூ மூன்கள் தோன்றுவதும் மிகவும் அரிது. அடுத்து இது போன்ற இரண்டு ப்ளூ மூன்கள் 2037ம் ஆண்டில் மட்டுமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நூற்றாண்டிலே மிகப்பெரிய சந்திர கிரகணம் ஜூலை 27ம் தேதி நடைபெறவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 82 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்த சந்திரகிரகணம் சுமார் 1 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்குமாம். இதனை இந்தியாவில் வெறும் கண்களாலே காணலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சந்திர கிரகணம் வரும் 27 ஆம் தேதி நள்ளிரவு 11.54 தொடங்கி அதிகாலை 1.52 வரை நீடிக்கும் என்றும் ரத்த நிறத்தில் சிவப்பு முழு நிலவு அதிகாலை 2.43 மணிக்கு தெரியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திர கிரகணம் நடப்பது சிவப்பு நிலா தோன்றுவதும் இயல்புதானே என கூறலாம். ஆனால் இந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் சூப்பர் மார்ஸ் பூமியில் தெரியவுள்ளது. அதாவது பூமிக்கு 4வது இடத்தில் இருக்கும் செவ்வாய் கோளானது பூமிக்கு 57.6 மில்லியன் கி.மீ தொலைவிற்கு வரவுள்ளது. இதற்குமுன் செவ்வாய் கோள் பூமிக்கு அருகில் 55.7 மில்லியன் கி.மீ தொலைவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வந்ததுள்ளது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் ஆனது பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் செவ்வாய் கோளானது பூமியை நெருங்க உள்ளது. விடியற்காலை இந்த சூப்பர் மார்ஸை வெறும் கண்களால் பார்க்கலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP